யார் இந்த செய்யிதுல் குதுப்?

இஸ்லாமிய வரலாற்றில் இஸ்லாத்தைக் கட்டிக் காக்க வேண்டும் எனும் பெயரில் சமுதாயத்தில் களமிறங்கிய எண்னற்ற அமைப்புக்கள் இஸ்லாத்தின் பிரதான மூலாதாரங்களான அல்குர்ஆன் அஸ்ஸுன்னா ஆகியவற்றை விட்டு நெறிபிறழ்வுப் பாதையை நோக்கிச் சென்று வழிகெட்டுப் போன வரலாறுகள் ஏராளம்!ஏராளம்.
அவ்வாரான அமைப்புக்களில் ஒன்றுதான் ஹஸனுல் பன்னா என்ற ஒருவரினால் எகிப்தில் தோற்றுவிக்கப்பட்ட “இஹ்வானுல் முஸ்லிமீன்” எனும் அரசியல் இயக்கமாகும்.இவ்வமைப்பின் கொள்கைகளை சரிகண்டு தீவிரப்பிரச்சாரம் செய்தவர்களில் முதன்மையானவர்களுல் ஒருவரே செய்யிதுல் குதுப் என்பவர்.
இவர் ஓர் தலைசிறந்த இலக்கியவாதியும் கூட.அன்றய எகிப்து தேசத்தின் தீவிர அரசியல் கட்சியாகக் காணப்பட்ட”இஹ்வானுல் முஸ்லிமீன்” இயக்கத்திற்கு தனது எழுத்தாற்றலைப் பயன் படுத்தி இஹ்வான்களின் கொள்கையை சர்வதேசமெங்கும் பரப்பிய பெருமை செய்யிதுல் குதுபையே சாறும்.
இவரின் கருத்துக்கள்,நூற்கள் அனைத்தும் ஆரம்பகாலகட்டத்தில் கருத்தாளம் கொண்டவை என்றே அறியப்பட்டு வந்தன.பின்னர் தான் இவரின் கருத்துக்கள் இஸ்லாத்தையே தகர்க்குமளவிற்கு வளந்தபோது இஸ்லாமிய அறிஞர்கள் அவரின் பிழையான கருத்துக்களுக்கு மறுப்பெழுத ஆரம்பித்தனர்.
இவர் எழுதிய நூற்களில் “பிலிலாலில் குர்ஆன்”என்பது பிரபலமான ஓர் நூலாகும்.இது அல்குர்ஆனின் விளக்கவுரை என அவ்வியக்க சகோதரர்கள் கூறிவருகின்றனர்.(அல்குர்ஆனின் விளக்கவுரைக்குரிய எந்த அடிப்படைகளும் அந்நூலில் கிடையாது என்பதனை குறித்த விடயத்தில் ஞானமுடையோர் அறிந்துகொள்வர்) இன்று வரை இலங்கை உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் அவ்வியக்க சகோதரர்களின் பள்ளிவாயல்களிலும், மத்ரஸாக்களிலும்,நிலையங்களிலும் இந்நூல் வாசிக்கப் படுவதை அவதானிக்க முடிகின்றது.
இந்து மதக்கொள்கையை இஸ்லாமென அங்கீகரிக்கிறார் இந்த செய்யிதுல் குதுப்.
ஏக இறைவனாகிய அல்லாஹ் அர்ஷ் எனும் சிம்மாசனத்திற்கு அப்பால் உள்ளான் என்பது இஸ்லாமிய அடிப்படைக்கொள்கையாகும்.இதற்குச் சான்றாக திருமறைக் குர்ஆனில் சுமார் 21 இடங்களில் அல்லாஹ் தான் அர்ஷ் எனும் சிம்மாசனத்தில் வீற்றிருப்பதாகப் பிரஸ்தாபிக்கிறான்.(அல்குர்ஆன்:7:54,10:3,13:2,20:5,25:59,32:4,57:4)
ஆனால் இந்த செய்யிதுல் குதுப் கூறும் லட்சணத்தைப் பாருங்கள்!
{ ثم استوى إلى السماء فسواهن سبع سماوات } . .
ولا مجال للخوض في معنى الاستواء إلا بأنه رمز السيطرة ، والقصد بإرادة الخلق والتكوين .
பொருள்:”அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான்” என்பதனை பெரிதாக அலட்டிக் கொள்ளத்தேவையில்லை. எனினும் அல்லாஹ் அர்ஷை ஆக்கிரமித்துள்ளான் என்பதையே அவ்வசனம் சுட்டிக்காட்டுகிறது.
(பார்க்க:பிலிலாலில் குர்ஆன்,முதலாம் பாகம்,26ம் பக்கம். www.altafsir.com எனும் இணைய தளத்திலும் இந்நூலைப் பார்வையிடலாம்)
இவரின் மேற்குறித்த கருத்தில் ஏற்பட்ட அவதானங்கள்
அவதானம்1
அல்குர்ஆனில் அல்லாஹ் கூறிய ஓர் விடயத்திற்கு மாற்று விளக்கம் கொடுப்பதற்கு இவருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? அல்லாஹ்வின் மார்க்கத்தில் சுய அபிப்பிராயம் கொள்ள எவருக்கும்,எச்சந்தர்ப்பத்திலும் அதிகாரம் கிடையாது.
இஸ்லாமிய ஆட்சி வேண்டும் என முழங்கும் இவருக்கு இஸ்லாத்தின் அடிப்படை விடயமான (ஈமான்) நம்பிக்கை விடயமே தெரியாதெனில் இவரை ஓர் இஸ்லாமிய அரிஞரென எப்படி அங்கீகரிக்க முடியும்? இவற்றையெல்லாம் இவ்வியக்க வாதிகள் சிந்திப்பார்களா?
அன்புக்குரியவர்களே!
ஒரு கனம் சிந்தித்துப் பாருங்கள்!அல்லாஹ் அர்ஷை ஆக்கிரமித்தான் என்றால் அல்லாஹ் ஆக்கிரமிப்பதற்கு முன் வேறு யாரோ ஒருவர் அங்கிருந்து ஆட்சிபுரிந்திரிக்கிறார் இதைத்தானே புரிந்துகொள்ள முடிகின்றது?(அல்லாஹ் எம்மனைவரையும் அத்தீய எண்னத்திலிருந்து காப்பானாக)
இன்னும் இவர் அதே நூலில் கூறும் இந்து மதக் கொள்கையைப் பாருங்கள்!
திருமறைக் குர்ஆனில் 112 வது அத்தியாயத்திற்கு விளக்கம் கூறும் வேளை
{ قل هو الله أحد } . . وهو لفظ أدق من لفظ « واحد » . . لأنه يضيف إلى معنى « واحد » أن لا شي ء غيره معه . وأن ليس كمثله شيء .
إنها أحدية الوجود . . فليس هناك حقيقة إلا حقيقته . وليس هناك وجود حقيقي إلا وجوده . وكل موجود آخر فإنما يستمد وجوده من ذلك الوجود الحقيقي ، ويستمد حقيقته من تلك الحقيقة الذاتية .
கருத்துச் சுருக்கம்:அங்கே(பூமியில்)அவனது அந்தரங்கத்தைத் தவிர வேறு அந்தரங்கம் கிடையாது.அவனது அந்தரங்க உள்ளமையைத் தவிர வேறு உள்ளமையும் கிடையாது.
(பார்க்க:பிலிலாலில் குர்ஆன்,08ம் பாகம்,127ம் பக்கம்)
சுப்ஹானல்லாஹ்! சுத்தமான அத்வைதக் கருத்தை மிகத் தெளிவாகக் கூறும் இவரெல்லாம் இஸ்லாத்தில் எப்படி முன்மாதிரியாக அமைய முடியும்? அனைத்திறைக் கொள்கையை சர்வசாதாரணமாக முன்வைக்கும் இவரை இவ்வியக்க சகோதரர்களால் எப்படிப் போற்றமுடிகின்றது?
கொஞ்சமாவது இறையச்சமிருந்தால் இப்படி இஸ்லாத்தை தகர்த்து,கேவலப்படுத்தும் இந்நூற்களை இவ்வியக்க சகோதரர்கள் இனியும் வாசிக்கக் கூடாது.
இவ்வத்வைதியை “அஷ்ஷஹீத்”எனவும் அழைக்கக் கூடாது.
சத்தியத்தை தெளிவாகவும்,ஒளிவு,மறைவின்றியும் தற்துணிச்சலோடு சர்வதேச மெங்கும் முன்வைக்கும் நாம் பல்வேறு சகோதரர்களிடம் இவ்வுண்மைகளை எடுத்துக் கூறியும் அச்சகோதரர்கள் தாங்கள் கொண்ட இயக்க வெறியால் அவற்றை மறுப்பதைக் காணுகிறோம்.
மரணித்துப் போன மனிதர்களை இப்படி விமர்சிக்கலாமா எனவும் அவர்கள் வினாத் தொடுக்கின்றனர்.இஸ்லாமிய கொள்கையை அழித்தொழிக்கும் வகையில் யார் கருத்துக்களை வெளியிட்டாலும் அக்கருத்துக்கள் முஸ்லிம் சமூகத்தில் அவசியம் சுட்டிக்காட்டப்படல் வேண்டும் என்பது இஸ்லாமியச் சட்டமாகும்.
அல்லாஹ்வின் தீனுக்கு பிழையான வடிவங்களை எந்த இயக்கம் கற்பித்தாலும் அவைகள் அவ்சியம் விமர்சனம் செய்யப்படல் வேண்டும்.
இஸ்லாத்தின் மீதே நாம் பற்றும்,பாசமும் கொள்ள வேண்டுமேயன்றி இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் மீது அல்ல.
இவ்வியக்கத்தின் உண்மையான, திடுக்கிடும், மறைக்கப்பட்ட தகவல்களை அவர்கள் அங்கீகரித்த நூற்களிலிருந்தே இன்ஷா அல்லாஹ் இணைய அன்பர்களுக்கு வழங்குவோம்)
குறிப்பு: செய்யிதுல் குதுபின் “பிலிலாலில் குர்ஆன்”எனும் நூலில் காணப்படும் இஸ்லாத்திற்கு விரோதமான கருத்துக்களை அறிய விரும்பும் மார்க்க அறிஞர்கள் இந்நூலை அவசியம் பார்வையிடவும்
“المورد الزلال في التنبيه على أخطاء الظلال في ظلال القرأن“
FOR MORE READING:













