த(க)ண்ணீரும் செந்நீரும்
பொருளாதாரம் என்பது ஒரு சமுதாயத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆணிவேராய் இருக்கின்றது. அந்த ஆணிவேரைப் பிடுங்கியெறிவதன் மூலம் விஷ விருட்சமாய் அழிவுக்கிளைகளைப் பரப்பி வியாபித்து நிற்கும் இஸ்ரேலின் எதேச்சதிகார ஆதிக்கத்தை அல்லாஹ்வின் உதவியோடு எம்மால் தகர்த்தெறிய முடியும். அந்த அடிப்படையிலேயே எமது பகிஷ்கரிப்புப் போராட்டத்தை நாம் முன்னெடுத்தல் வேண்டும்.
பொதுவாக வளைகுடாநாடுகளில் குடிநீர்ப் பாவனைக்காக நாம் பல்வேறு கம்பனிகளின் குடிநீர் போத்தல்களையும் கொள்கலன்களையும் வாங்கி உபயோகப்படுத்துகின்றோம். அவற்றில் எந்தெந்தக் கம்பனிகள் தமது மொத்த லாபத்தில் கணிசமான ஒரு தொகையை இஸ்ரேல் எனும் ஆக்கிரமிப்பு அரசாங்கத்துக்கு நிதியுதவி அளிக்கின்றன என்பதைப் பற்றியும் ஆழ்ந்து சிந்திக்கவேண்டிய காலம் வந்துவிட்டது.
ஆம். இஸ்ரேல் அனுதாபியான நெஸ்லே கம்பனியின் உற்பத்திகளைப் பகிஷ்கரிக்கவேண்டிய அவசியம் என்ன என்பதைப் பார்ப்போம். அந்த நிறுவனத்தின் பெருமளவு முதலீடுகளும் அதன் விளைவாகக் கிடைக்கும் கோடிக்கணக்கான லாபமும் திருட்டுத் தேசமான இஸ்ரேலின் வளர்ச்சிக்கு உந்துசக்தியை வழங்கி வருகின்றது. அதனை உறுதிப்படுத்தும் தரவுகள் கீழே உரிய இணைப்புக்களுடன் தரப்பட்டுள்ளன:
1. நெஸ்லே
ஆய்வுக் குறிப்புரைகள்
ஸ்விஸ் கம்பனியான நெஸ்லேயின் மொத்த முதலீட்டில் 50.1 சதவீதமானவை இஸ்ரேலிய உணவுற்பத்தி நிறுவனமான ஓஸெம் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும். 2000 ஆம் ஆண்டு டிசம்பரில், இஸ்ரேலிய ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான மையத்தை நிருவகிப்பதற்கு பல மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடுசெய்யப் போவதாக மேற்படி நிறுவனம் அறிவித்திருந்தது. (1)
1998 இல் நெஸ்லே சார்பாக திரு. பீட்டர் ப்ராபெக் லெட்மாத்தே இஸ்ரேலியப் பிரதமர் நெத்தன்யாஹுவிடமிருந்து ஜுபிலி விருதினைப் பெற்றுக்கொண்டார். இது, இஸ்ரேலியப் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக தமது முதலீடுகள் மற்றும் வியாபாரத் தொடர்புகள் மூலம் அளப்பரும் பங்களிப்புச் செய்துவரும் தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் ‘இஸ்ரேலிய தேசத்தின்’ அதி உயர்ந்த கௌரவ விருது என்று மதிக்கப்பட்டு வருகிறது. (2)
http://www.arabia.com/qatar/business/article/english/0,5508,36207,00.html
‘இஸ்ரேலிய உணவுற்பத்தி நிறுவனமான ஓஸெம் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் உரிமையாளர் இஸ்ரேலிய ஆய்வு மற்றும் அபிவிருத்தி மையத்திற்கு பல மில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளார்’
டிசம்பர் 24, 2000, பி.ப. 12.17
டெல் அவிவ் (ரொய்ட்டர்ஸ்)
பிரபல ஸ்விஸ் உணவு உற்பத்தி நிறுவனமான நெஸ்லே இஸ்ரேலிய நகரான ஸ்டெரொட்டில் நொறுக்குத் தீனிகள் தொடர்பான உலகளாவிய ஆய்வு மற்றும் அபிவிருத்தி மையத்தினை நிறுவவுள்ளது என மாரிவ் எனும் இஸ்ரேலியப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
நெஸ்லே நிறுவனம் ஸ்டெரொட்டில் உள்ள தொழிற்சாலையில் நொறுக்குத் தீனிகளைத் தயாரித்துவருகிறது. இந்நிறுவனத்துக்கு உலகெங்கிலும் சொக்லேட்,கோப்பி மற்றும் பால் உற்பத்திப் பொருட்களுக்கான 17 ஆய்வு மற்றும் அபிவிருத்தி மையங்கள் உள்ளன என்றும் அவற்றின் ஆய்வுக்காக வருடாந்தம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டு வருவதாகவும் மேற்படி பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது.
[2] Friends of Al-Aqsa
http://www.aqsa.org.uk/flyers/boycott.html
நெஸ்லே உற்பத்திப் பொருட்கள் தொடர்பான முழுமையான தகவல்களுக்கு:
http://www.nestle.com/all_about/at_a_glance/aag-main_brands.html
நன்றி: URL: http://www.inminds.com/boycott-nestle.html
சரி, இனி வளைகுடா நாடெங்கிலும் நெஸ்லே கம்பனியால் விநியோகிக்கப்படும் குடிநீர் போத்தல்கள் எந்தெந்த வியாபாரக் குறியீடுகளில் உள்ளன என்று நோக்குவோம்:
நாடுகள் வியாபாரக்குறியீடு(Brand)
பஹ்ரைன் அல் மன்ஹல்
———————————————————————————————————————————————————————————————————–
எகிப்து பரகா, நெஸ்லே பியோர் லைஃப்
———————————————————————————————————————————————————————————————————–
ஈரான் நெஸ்லே பியோர் லைஃப்
————————————————————————————————————————————————————————————————————-
ஜோர்தான் ஃகாதீர், நெஸ்லே பியோர் லைஃப்
—————————————————————————————————————————————————————————————————————–
லெபனான் நெஸ்லே பியோர் லைஃப், ஸொஹட்
——————————————————————————————————————————————————————————————————————–
கட்டார் அல் மன்ஹல்
————————————————————————————————————————————————————————————————————————
சவூதி அரேபியா அல் மன்ஹல், நெஸ்லே பியோர் லைஃப், ஸ்பிரிங்ஸ்
————————————————————————————————————————————————————————————————————————
யூ.ஏ.ஈ. நெஸ்லே பியோர் லைஃப்
———————————————————————————————————————————————————————————————————————————-
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே!
எமது தாகத்தைத் தணித்துக்கொள்வதற்காக நாம் தண்ணீர் அருந்துவதில் தவறில்லை. ஆனால், அந்தத் தண்ணீரின் மூலம் கிடைக்கும் லட்சக்கணக்கான பணத்தைக் கொண்டு இஸ்லாத்தின் எதிரிகள் எமது முஸ்லிம் சகோதரர்களின் இரத்தத்தை ஓட்டுவதற்கு நாமும் மறைமுகமாக உதவிசெய்யலாமா?
இந்தக் குழந்தைகளைப் பாருங்கள்! சிட்டுக்குருவியாய்ப் பறந்து திரியவேண்டிய வயதில் கொடூரமான வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டுக் கிடப்பதைப் பாருங்கள்! அந்தக் கொலைகாரர்களுக்கு ஆயுதம் வாங்குவதற்கு நாமும் சேர்ந்து காசு கொடுப்பதா? நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
இடித்துத் தரைமட்டாக்கப்படும் எமது சொந்தச் சகோதரர்களின் வீடுகளைப் பாருங்கள்! தமதே சொந்த பூமியில் கௌரவமாக வாழ்வதற்கான இருப்பிடங்களை இழந்து அகதிமுகாம்களுக்குள் காலத்தையோட்டும் இவர்களைப் போன்ற அகதிகளை உருவாக்குவதற்கு நாம் எமது பணத்தை வழங்கலாமா? முடிவெடுக்கவேண்டியது நீங்கள்தான்.
இஸ்ரேலிய வதைமுகாம்களில் சித்திரவதை அனுபவிக்கும் இந்தச் சிறுவனைப் பாருங்கள்! இவனைப் போல் ஆயிரக்கணக்கான எமது உடன்பிறப்புக்களை இவ்வாறு கொடுஞ்சித்திரவதைக்கு உட்படுத்துவதற்கு நாமும் மறைமுகமாக நிதியுதவி அளிப்பதா? மனசாட்சியைத் தொட்டு ஒரு முடிவு எடுங்கள்!
உங்கள் முடிவான பதில் ‘இல்லை. நாங்கள் அப்படிச் செய்ய மாட்டோம்’ என்று இருக்குமானால், மேற்படி நெஸ்லே நிறுவன உற்பத்திப் பொருட்களை இனிமேல் வாங்காதீர்கள். குறிப்பாக, மேற்கண்ட பெயர்களில் உள்ள தண்ணீர் போத்தல்களைக் காணநேரும் போது அதற்குள் அடைக்கப் பட்டிருப்பது தண்ணீரல்ல எமது பிஞ்சுகளின் ரத்தம்தான் என்பது உங்கள் நினைவுக்கு வரட்டும்.
இது தொடர்பான கருத்துக்களை ஒரு சகோதரியுடன் தொலைபேசியூடே பகிர்ந்துகொண்டதன் விளைவாக, அவர் தன் கணவரிடம் எடுத்துச் சொல்லி, அன்னாரின் அலுவலகத்தில் மாதாந்தம் வாங்கும் நெஸ்லேயின் 15 பெரிய குடிநீர் கொள்கலன்களுக்குப் பதிலாக தற்போது 15 ரையான் குடிநீர் கொள்கலன்களை வாங்குவதற்கு சிபாரிசு செய்துள்ளார். மாஷா அல்லாஹ்! சிறுதுளிகள் பெரு வெள்ளமாகட்டும்! அநீதியாளர்களை அடித்துச் சென்று ஓரங்கட்டட்டும்! அல்லாஹு அக்பர்!
இங்கே, கட்டாரில், ரையான், ஷிஃபா முதலான மாற்றீடுகள் உள்ளன. அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர நெஞ்சங்களே! இதைத் தவிர கட்டாரில் வேறென்ன மாற்றீடுகள் உள்ளன அல்லது நீங்கள் வாழும் ஏனைய நாடுகளில் மேற்படி நெஸ்லேயின் குடிநீர் கொள்கலன்களுக்குப் பதிலாக என்னென்ன மாற்றீடுகள் உள்ளன என்பதைப் பற்றியும், இந்தப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் நீங்கள் உங்கள் வீடுகளில், அலுவலகத்தில் மேற்கொண்ட மாற்றங்கள் என்ன என்ற உங்கள் அனுபவங்களையும் தயவு செய்து இந்த இழையில் தொடர்ந்து பதிவுசெய்யுங்கள்! அது ஏனையவர்களுக்கும் ஓர் உந்துசக்தியைக் கொடுக்கும்.
வெறுமனே இன்று பேசிவிட்டு நாளை மறந்துவிடும் விடயமாக இல்லாமல், இந்தப் பகிஷ்கரிப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கும் வகையில் இக்குழுமத்திலுள்ள ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை, அனுபவங்களை, முயற்சிகளை, முன்னெடுப்புகளைத் தொடர்ச்சியாகப் பதிவுசெய்யுமாறு பணிவன்போடு வேண்டுகின்றேன். அத்துடன், உங்கள் உற்றார் உறவினர் அறிந்தவர் தெரிந்தவர் மத்தியிலும் இதனைப் பரப்புங்கள்! இஸ்லாத்தின் எதிரிகளுக்குத் தம்மையறியாமலேயே உதவிசெய்து வருவதிலிருந்து அவர்களைத் தடுத்து நிறுத்துங்கள்!
இன்ஷா அல்லாஹ் எம் ஒவ்வொருவரது முயற்சிக்கும் நிச்சயம் அந்த றப்புல் ஆலமீனிடம் கூலியுண்டு. எமது செயலுக்கான கூலிகளை அவன் ஒருபோதும் வீணாக்கிவிட மாட்டான்.
இந்த அல்குர்ஆன் வசனங்களைப் பாருங்கள்:
4:40 நிச்சயமாக அல்லாஹ் (எவருக்கும்) ஓர் அணுவளவு கூட அநியாயம் செய்ய மாட்டான். (ஓர் அணுவளவு) நன்மை செய்யப்பட்டிருந்தாலும் அதனை இரட்டித்து, அதற்கு மகத்தான நற்கூலியை தன்னிடத்திலிருந்து (அல்லாஹ்) வழங்குகின்றான்.
4:74 எனவே மறுவுலக வாழ்க்கைக்காக இவ்வுலக வாழ்க்கையை விற்றுவிடுபவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்களாக. யார் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து கொல்லப்பட்டாலும் சரி, அல்லது வெற்றியடைந்தாலும் சரி, அவருக்கு நாம் விரைவாக மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்.
5:9 ஈமான் கொண்டு. நல்ல அமல்கள் செய்வோருக்கு, மன்னிப்பையும், மகத்தான (நற்)கூலியையும் அல்லாஹ் வாக்களித்துள்ளான்.
6:160 எவர் ஒருவர் (ஒரு) நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்துப் பங்கு (நன்மை) உண்டு. எவர் ஒருவர் (ஒரு) தீமையைச் செய்கிறாரோ அதைப்போன்ற அளவுடைய கூலியே கொடுக்கப்படுவார் – அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள்.
8:60 அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம். அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்). அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் – அல்லாஹ் அவர்களை அறிவான். அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும். (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது.
ஆகவே, வாருங்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு போராடுவோம்! அல்லாஹ்வின் துணைகொண்டு வெல்வோம்! அல்லாஹு அக்பர்!
சிறு குறிப்பு: கொக்காகோலா கம்பனியின் இஸ்ரேலிய ஆதரவு பற்றியும் நாம் விரிவாகப் பார்க்கவுள்ளோம், இன்ஷா அல்லாஹ். எனவே, அக்குவா என்ற பெயரில் அமைந்த அதன் குடிநீர் போத்தல்களையும் பகிஷ்கரித்து வாருங்கள் எனத் தயவாய் வேண்டுகிறேன்.
அன்புடன்,
இஸ்லாமிய சகோதரி,
லறீனா அப்துல் ஹக்.
நெஸ்லே உற்பத்திப் பொருட்கள்:
Kit Kat / Milkybar/ Quality Street
Perrier/Vittel/Pure life Water
Maggy/Clusters cereal
Nescafe Coffee
Buitoni Pasta
Cross Blackwell/ Sarson’s
Carnation/ Libby’s













